Skip to main content

Posts

வேண்டா குப்பையிலும் தகவல் திருட்டை நடத்த முடியும்....அதுவே தொழில்நுட்பத்தின் நீட்சி

சமீப காலமாக பல டிஜிட்டல் தொழில்நுட்ப திருட்டு குறித்து நாம் பரவலாக பேசி வருகிறோம். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் மூலம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அரசியல் மற்றும் பிற தேவைகளுக்காக விற்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் பகிரங்க குற்றச்சாட்டை வெளியிட்டார். இந்த விவகாரம் பல நாடுகளில் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் தகவல் திருட்டு என்பது மேலும் நுட்பமானது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பத்தை நம்பியே நகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்கு பெரும்கூலியாக நாம் அனுதினமும் நமது மதிப்புமிகு தவல்களைத் தொடர்ந்து தாரைவார்த்து வருகிறோம். உதாரணமாக, நீங்கள் செல்போனில் ஆப்-களை இன்ஸ்டால் கெய்யும்போது, நுழைவில் சில ஒப்புதல்களை கேட்கும், அதாவது உங்களது கான்டேக்ட் லிஸ்ட், கேமரா, காலேண்டர், செட்டிங்க்ஸ் ஆகியவற்றை இயக்கலாமா? என்ற ஒப்புதல் கேட்கப்படும். ஆனால் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் நம்மால் பார்க்கமுடியாத சில நுணுக்கமான விஷயங்கள் அடங்கியுள்ளன.அதில் டிஸ்ப்ளே, ஸ்க்ரீன் ஷேரிங் எனப்படுவது மிகவும் அபாயகரமான ஒன்று, இதன் மூலம் நீங்கள் ஸ்க்ரீனில் டைப் செய்ய
Recent posts

இரும்புக் கரங்களில் வலுபெற்ற அகண்ட பாரதத்தின் கதை

இந்தியாவில் நிலவும் சார்பற்ற ஒற்றுமை சர்தார் வல்லபாய் படேலின் கைவண்ணம். ஆகையால் தான் அவர் அனைத்து மக்கள் நலன்களையும் கருத்தில் கொண்டு ஜனநாயகம் மற்றும் இந்திய அரசின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார். ஆனால் அவர் நேருவை போல வசீகரமான தோற்றம் கொண்டிருக்கவில்லை.  1947-ம் ஆண்டு ஜூன் மாதம் மாகாணங்கள் இணைப்புத் துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் முக்கிய நோக்கம் பரப்பளவு, மக்கள்தொகை, புவி அமைப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளில் மிகவும் வேறுபட்டிருந்த நாட்டிலுள்ள 550-க்கும் அதிகமான சுதேச மாகாணங்களோடு பேச்சுகள் நடத்தி, அதற்கு உத்வேகம் அளித்து, மாகாணங்களோடு இந்தியாவின் உறவை பராமரிப்பதாகும். பிரிட்டிஷ் ஆட்சியில் வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது. அப்போது, இங்கு மாநிலங்களின் பிரச்னைகள் மிகவும் சிரமம் வாய்ந்தது, எனவே அதனை தீர்க்க உன்னால் தான் முடியும் என மகாத்மா காந்தி படேலிடம் தெரிவித்தார். பிரிட்டஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது 550 குறுநில சமஸ்தானங்

வயோதிகம்

வாய் அதிகம் திறந்தாலும் புரிவதில்லை கேட்பவருக்கு மெல்லத் தலையை மேலும் கீழும் தல்லாடி பேசினாலும் ரசிக்க ஆளில்லை வயோதிகத்தில்........ கௌரவமாய்ப் பிழைக்கும் வழி தேடுகின்றனர் பல பெரியவர்கள் புரிந்து கொள்ள நேரமில்லாமல் சிதறி கொண்டிருக்கும் நாம்! முதுமையில் வலியும் சுகமும் அதிகம் !
Its being yourself

I feel

Life says that i won't be access to you but the same life teaches so many explanations without any concise